Advertisment

சேலம் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் ஆசாமிகள் தப்பி ஓட்டம்

10 kg ganja seized in Salem train; The kidnappers fled

சேலம் வழியாகச் சென்ற பயணிகள் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர்.

Advertisment

பிறமாநிலங்களில் இருந்துரயில் மூலம்தமிழகத்திற்குகஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதைத்தடுக்கரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். எனினும், ரயில்களில் கஞ்சா கடத்துவது தொடர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், சேலம் ரயில்வே காவல்துறை எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையில் தனிப்படையினர்டிச. 7ம் தேதி காலைதன்பாத்-ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.ஜோலார்பேட்டைரயில்நிலையத்தில் இருந்துரயிலில் ஏறி சேலம் வரை ஒவ்வொருபெட்டியாகசோதனை நடத்தினர். பின்பகுதியில் உள்ள ஒரு முன்பதிவில்லா ரயில் பெட்டியில் சோதனை நடத்தியபோது, பயணிகள்பார்சல்களைவைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது தெரியவந்தது.

அந்தப் பையைச் சோதனையிட்டதில் அதற்குள் 10 கிலோ கஞ்சா5 பொட்டலங்களில் இருப்பது தெரியவந்தது. கஞ்சாவைக் கடத்தி வந்த மர்ம நபர்கள், காவல்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து தப்பிச் சென்று விட்டது தெரியவந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்டகஞ்சாவைதனிப்படையினர் ரயில்வே காவல்துறையினரிடம்ஒப்படைத்தனர். ஆய்வாளர் சிவ செந்தில்குமார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Cannabis police Salem Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe