Advertisment

தமிழ்நாட்டில் 2 ஏ.டி.ஜி.பி.க்கள் உட்பட 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் 

10 IPS officers including 2 ADGPs in Tamil Nadu has been transferred

Advertisment

தமிழ்நாடு காவல்துறையில் 2 ஏ.டி.ஜி.பி.க்கள் உட்பட 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை போலீஸ் பயிற்சி மைய கல்லூரிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜெயந்த் முரளி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாகவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அபய் குமார் சிங் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.விடுமுறையில் இருந்த மகேந்திர குமார் ரத்தோட், சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார்.டி.ஐ.ஜி. சரவண சுந்தர்திருச்சி சரக டி.ஐ.ஜி.யாகவும், ராதிகா ஜெனரல் டி.ஐ.ஜி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisment

விடுப்பில் இருந்த எஸ்.பி. நிஷா, கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாகவும், சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக இருந்த மாடசாமி, சேலம் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த வேதரத்தினம், விரிவாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe