Advertisment

ஆம்பூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம்!

10 injured in van overturn accident near Ambur

ஓசூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 12 பேர் திருத்தணியில் நடைபெற்ற உடன் பணிபுரியும் நண்பரின் திருமணத்திற்கு ஓசூர் பகுதியில் இருந்து வேன் மூலமாக திருத்தணி சென்று திரும்பிய பொழுது ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஜெயபால் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவர் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை பிரேக் போட்டு உடனடியாக ஓட்டுநர் நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

இதில் வேனில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர்காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஜெயபால் சாலையில் தடுமாறி கிழே விழுந்து லேசான காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisment
accident ambur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe