Advertisment

பழனி முருகன் கோயில் ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம்

10 employees of Palani Murugan temple have been dismissed

Advertisment

பழனி முருகன் கோயில் ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முடி எடுக்கும் ஊழியர்கள் இருவர் பணம் பெற்றதாகக் கூறி அவர்களைகோவில் இணை ஆணையர் லட்சுமி பணியிடை நீக்கம் செய்தார். இதனைக் கண்டித்து முடி எடுக்கும் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இணை ஆணையர் லட்சுமியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவில் முடி எடுக்கும் ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி10 பேரை பணியிடை நீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 60 பேர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

temple pazhani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe