Advertisment

காட்டன் சட்டைக்கு பின்னால் வில்லங்கம்... சென்னையில் சிக்கிய 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள்!

10 crore rupees worth of drugs trapped in Chennai!

சென்னை விமான நிலையத்தில் 49 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல்களை கையாளும் பகுதியில் எப்போதும் போல சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பெரிய பார்சல் ஒன்றை சோதனையிட்டனர். ஐக்கிய அமீரகதிற்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட காட்டன் சட்டைகள் இருந்த அந்த பார்சலை தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, காட்டன் சட்டைகளை மடிப்பு கலையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும் அட்டைகளைக் கத்தியால் கிழித்து பார்த்தனர்.அதில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் அந்த பார்சலில் இருந்த 1,200 காட்டன் சட்டைகளில் 515 சட்டைகளில் இப்படி பவுடர் வடிவிலான போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 49.2 கிலோ எடைகொண்டபோதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

Advertisment

Drugs airport Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe