10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிட மாணவர், மகளிருக்கான விடுதிகள்... முதல்வர் திறந்து வைத்தார்!

10 crore rupees Adithravidar student, hostels for girls ... Chief Minister opened!

இன்று (30.08.2021) திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழாவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்துதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ஆகிய எட்டு கட்டடங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர், தாட்கோ மேலாண்மை இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் நகரில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் தங்கும் விடுதி, மயிலாடுதுறை தில்லையாடியில் தலா ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் விடுதி, மயிலாடுதுறையில் ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவியர் விடுதி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதி, நபார்டு நிதி உதவியுடன் திருநெல்வேலியில் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவர் விடுதி, கிருஷ்ணகிரியில் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி என மொத்தம் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

Hostel TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe