Skip to main content

மாணவர்களை காவு வாங்க நீட் வேண்டாம்... கணக்கு பாடம் போதும்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

தமிழ்நாட்டில் 10, 12 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் வழக்கமாக காலையில் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு குளறுபடியாக 10 ம் வகுப்புகளுக்கான மொழிப்பாடங்கள்  தேர்வு மதிய நேரத்தில் நடத்தப்பட்டது. அடுத்து  25 ந் தேதி காலை கணக்கு பாடத்திற்கான தேர்வு நடந்தது. இந்த கணக்கு தேர்வு தான் மாணவர்களை காவு வாங்கிக் கொண்டிருப்பதாக பெற்றோர்கள் கொந்தளிக்கிறார். 

 

exam

 

வழக்கமான பாடத்திட்டத்தில் பாடம் நடத்தப்பட்டு நீட் தேர்வுக்கு இணையான கேள்விகளை கேட்டதால் மாணவர் முதல் நிமிடமே அதிர்ச்சியானார்கள். நூறு என்று இலக்கு வைத்து சென்ற மாணவர்கள் தேர்ச்சியனால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். பாடம் நடத்திய கணக்கு ஆசரியர்களும் கூட அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீழ்வதற்குள் சின்னசேலம் மாணவி பூங்குழலி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது தான் வேதனை. நீ்ட்டுக்கு அனிதா.. பத்தாம் வகுப்புக்கு பூங்குழலி பலி.

 

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மா செ கவிவர்மன் கொந்தளிப்பாக பேசினார்..

 

 

10 ம் வகுப்பு வினாத்தாள் தயாரித்த அந்த ஹிட்லர்களிடம் கேட்கிறேன்... 100 மார்க் எடுத்தாலும் எதற்கும் பயன்படப்போவதில்லை.பிஞ்சுகுழந்தைகளை மனரீதியாக இறுக்கமாக்கி, தவிக்கவிட்டு, செய்வதறியாது திகைக்க வைத்து சந்தோசப்படும் ஒருவகை மனநிலைபாதித்த சைக்கோக்களால் உருவாக்கப்பட்ட வினாத்தாள் என்பேன். தங்கள் திறமையை இளம் மாணவர்களின் இதயத்தை காயப்படுத்தி நிரூபித்துள்ள இரக்கமற்றவர்கள். ஏழை கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கை பின்புலம் அறியாத மேல்தட்டு அதிமேதாவிகள்.

 

புளியமரத்து பள்ளிக்கூடம், கரும்பலகை,  கணக்குவாத்தியார் இல்லாத பள்ளிக்கூடங்களில், நூறுநாள் வேலைபார்த்து, பாத்திரம் தேய்த்து, மூட்டை தூக்கி படிகக்கவைக்கும் அனிதாக்களின் தேசம் இது.

 

அந்த பிஞ்சுக்குழந்தைகள்.. இத்தனை கடினமான கேள்வித்தாளை பார்த்தவுடன் 5 நிமிடம் அழுதேன்... பிறகு நிறைவில்லாமல் எழுதினேன்... எனச்சொல்லும் போது சுருக்கென்று வலிக்கிறது. கிராமப்புற பள்ளி மாணவர்கள் முகம் இருண்டு போய்கிடக்கிறது. நீட்டுக்கு தங்கை அனிதாவை பலிகொண்டவர்கள் பத்தாம் வகுப்புக்கு பூங்குழலியை பறித்துக் கொண்டார்கள்.

 

மாணவர்கள் முகத்தில் இருட்டைப் பூசும் கேவலமான அதிமேதாவி ராமானுஜர்கள் என்றார் கடுமையாக.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Government school teacher arrested under pocso

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன. 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.