
தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலைத் தோட்ட கழக ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு 8.33 சதவிகிதம்போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத் தொகை என 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால், போனஸ் பெறத் தகுதியுள்ள 2.91 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதால் அரசுக்கு 210.48 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)