Advertisment

ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்

10 acres of sugarcane burned and damaged near Srimushnam

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தில்10 ஏக்கர் கரும்பு எரிந்து சாம்பலானது.

Advertisment

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், ராஜேசேகர் ஆகியோருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த கரும்பு வயலுக்கு அருகில் இருந்த நெல் வயலில் நெல் அறுவடை முடிந்து வைக்கோலை எரியூட்டியுள்ளனர். அப்போது பலமான காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக தீ கரும்பு வயலில் பரவியது. இதில் 10 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த கரும்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில்எரிந்து சாம்பலான கரும்பின் மதிப்புரூ. 10 லட்சம்என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
srimushnam sugarcane
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe