கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முல்லை நகரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் வீட்டில் சோதனை செய்தபோது அவரது வீட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான 6000 பாக்கெட்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் அதில் சம்பந்தப்பட்ட சுரேஷ்குமாரை கைது செய்ததுடன், ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.