கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/as12.jpg)
மல்லிகா என்ற பெண் பாகலூர் சாலையில் உள்ள ஆந்திரா வங்கி கிளையில் தனது கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் புறப்படத் தயாரானார். சீட்டின் கீழ் அவர் பணத்தை வைத்தபோது சில நபர்கள்பணம் கீழே விழுந்துள்ளது அது உங்கள் பணமா என்று பாருங்கள் எனக்கூறி கவனத்தை திசைதிரும்பியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை எடுக்க மல்லிகா சென்ற பொழுது மறுபுறம்அவர்களுடன் இருந்த2 மர்மநபர்கள் இருசக்கர வாகன சீட்டுக்கு அடியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை லாவகமாக திருடிக் கொண்டு தப்பினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aq213.jpg)
அந்த இடத்தில்பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. திட்டமிட்டு பணம் திருடப்பட்டதைஉணர்ந்த மல்லிகா காவல்துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow Us