சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் கடந்த 26 ஆம் தேதிரோந்து பணியில் வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்தபோதுசந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று பைகளையும் கீழே போட்டுவிட்டு வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் ஒரு கோடியே 56 இலட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்துள்ளது. அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்த பணம் நந்தனத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என கூறப்பட்டது.மேலும் தனிப்படை அமைக்கப்பட்டுஅந்த பகுதியில் உள்ள சிசிவிடி காட்சிகளை வைத்து அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்எனபோலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்அந்த பணத்திற்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என தெரிவித்துள்ள போலீஸ் தரப்பு அந்த பணத்தை தாசில்தார் ராமனிடம்ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை வீசிச்சென்ற நபர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.