ரோட்டில் வீசப்பட்ட 1 கோடியே 56 லட்சம் ரூபாய் பணம் யாருடையது? - போலீசார் தகவல்

சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று பைகளையும் கீழே போட்டுவிட்டு வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் ஒரு கோடியே 56 இலட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்துள்ளது. அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

1 crore 56 lakh rupees throwing on the road: looted money-police information

1 crore 56 lakh rupees throwing on the road: looted money-police information

இந்நிலையில் அந்த பணம் நந்தனத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிவிடி காட்சிகளை வைத்து அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்எனபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Investigation money police
இதையும் படியுங்கள்
Subscribe