தைப்பூசத் திருநாளை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகளிலும், மருதமலை முருகன் கோயிலும், சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பழனியில் வெகு விமரிசையாக நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி சுமந்து பாதயாத்திரை வந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல்வேறு தலைவர்களும் தைப்பூச திருநாளுக்கு வாத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி சால்வை மற்றும் மாலை அணிவித்து கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் சொந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுடன் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/01/811-2026-02-01-18-56-24.jpg)