Advertisment

டெட் தேர்வு விவகாரம்; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு!

tn-sec

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதி வெற்றிபெற வேண்டும் என கடந்த 2009ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகு சில நியமனங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமலே சில மாநிலங்களில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தாலும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுத் தான் பணியில் தொடர முடியும் என்று ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

அதே சமயம் 2009ஆம் ஆண்டு இந்த சட்டம் வருவதற்கு முன்பாகவே பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்குள் மட்டுமே இருந்தால் அவர்கள் ஆசிரியர்களாக தொடரலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய வாய்ப்பிருக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றலாம். அல்லது  கட்டாய ஓய்வு பெறலாம் என வழக்கை விசாரித்த நீதிபதி திபான்கர் தத்தா தீர்பளித்திருந்தார். மேலும் சிறுபான்மை நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா?. அல்லது நடைமுறை உரிமைகளை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் குழுவுக்கு வழக்கை நீதிபதி திபான்கர் தத்தா பரிந்துரைத்திருந்தார். 

Advertisment

மற்றொருபுறம் உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து ஆசிரியர் சங்கங்களை அழைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் பணியில் உள்ள ஆசிர்யர்கள் தங்களது பணியில் தொடர்பவதற்கு எதுவாக தமிழக அரசு சார்பில் டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்க்ல் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

anbil mahesh school education department Supreme Court teachers tet tet exam tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe