வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பென்ட்லேண்ட் உயர் சிகிச்சை மருத்துவமனை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்த பெண் குழந்தை சடலமாக இருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளங் குழந்தையின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கழிவுநீர் கால்வாயில் பெண் பச்சிளங் குழந்தையை வீசிச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/24/4-2025-11-24-16-58-46.jpg)