இருசக்கர வாகன உதிரி பாக கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், பல்வேறு விதமான இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படடு வருகின்றன. மேலும், வெல்டு வைக்கும் பணிகள் மற்றும் பேட்டரி போன்றவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில், நேற்று இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட கடையில் இருந்த ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறி உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கடையில் பற்றிய தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவி அதிக அளவிலான கரும்புகை வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வீடுகளில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடை மற்றும் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பற்றி கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சு பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. 

Advertisment