Advertisment

ராமதாஸின் முடிவில் இழுபறி; எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம்!

ramadosss

Tensions over Ramadoss decision about alliance

பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

Advertisment

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிர்திசையில் இருக்கும் கூட்டணியில் இணைய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், எந்த கூட்டணியில் இடம் பெறுவது என்பது ராமதாஸ் இதுவரை உறுதி செய்யாமலே உள்ளார். இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், 28ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்தான அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

யாருடன் கூட்டணி சேர்வது இன்று (28-02-26) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தை இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது என்று பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜி.கே.மணி, “கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தை தொடர்ந்து போய் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கட்டாயம், கூட்டணி குறித்த செய்தி மிக விரைவில் வரும். பா.ம.கவில் நெருக்கடியான குழப்பான சூழ்நிலை இருக்கிறது. முன்ன இருந்த மாதிரி ஒன்றுபட்ட பா.ம.க என்ற நிலை இல்லாததால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது, கட்சிக்காரர்களின் மனநிலை, கருத்தையெல்லாம் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்” என்று கூறினார். 

gk mani pmk Ramadoss anbumani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe