இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில் நடித்திருந்தவர் மூதாட்டி காட்டுபேச்சி முத்தம்மாள். நெல்லையில் வசித்து வரும் இவர், அவர் வாழ்ந்து வரும் குடியிருப்பு பகுதியை ஒட்டிய இடத்தில் மலை போல குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிதும் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடித்த கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள 'கண்டா வர சொல்லுங்க' என்ற பாடலை வைத்து கலெக்டருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisment

இது சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோவில், 'கண்டா வரச்ச்சொல்லுங்க கலெக்ட்டரை கையோடு கூட்டி வாருங்கள். கண்டா வரச் சொல்லுங்க எங்க நெலமைய பாக்குறதுக்கு கலெக்டர் அய்யாவை கையோடு கூட்டி வாருங்கள். கண்டா வரச் சொல்லுங்க எங்க கொடுமையை பாக்குறதுக்கு கலெக்டர் அய்யாவை கையோடு கூட்டிவாருங்க. இந்த குப்பையை கொட்டி கண்ணீரு வடிக்கிறோம். அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல கலெக்டர் அய்யா வருணுமே...'' கண்ணீருடன் பாடினார்.

Advertisment

மேலும் பேசிய காட்டுப்பேச்சி முத்தம்மாள், ''அன்னன்னைக்கு பாடுபட்டு திங்குற ஆளுங்க அய்யா. யாரும் வசதி உள்ள ஆட்கள் கிடையாது. வேணும்னா எங்க குடிசைகளை வந்து பாருங்க. கலெக்டர் அய்யா கண்டிப்பாக நீங்க எங்க நெலமைய பாக்க வரணும். கண்ணீர் வடிச்சு சொல்றேன் கண்டிப்பாக நீங்க வரணும். புகையையும் இந்த குப்பையை வந்து பாருங்க அய்யா'' என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.