இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில்  சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும்  பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களான  521 ஆண்களுக்கு வேஷ்டி,   சட்டையும்  இனிப்புகளும் 490 பெண்களுக்கு சேலைகளும் இனிப்புகளும் என  மொத்தம் 1011 பணியாளர்களுக்கு   திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்  வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. “கிராம சபை கூட்டத்தில் நமது  முதலமைச்சர்,  ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும்.  நமது  கிராமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்குள்ளது. மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பையைத் தனியாகப் பிரித்து போடவேண்டும் என்று கூறியிருக்கிறார்.தூய்மைப் பணியாளர்களாகிய நீங்கள்  வீடு வீடாகச் செல்லும்போது பொதுமக்களிடம்,  நமது முதலமைச்சரின் சாதனைகளைக் கூறி,   2026 லும்  மு.க.ஸ்டாலின் ஆட்சியே மீண்டும் தொடரவேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.” எனப் பேசினார்.  

Advertisment