ஸ்பைஸ் ஜெட் விமானம் துபாயிலிருந்து இன்று (28.08.2025) காலை 5 மணிக்குப் புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு காலை 06:40 மணிக்கு வந்தடைந்தது. இதனையடுத்து இந்த விமானம் மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12. 20 மணிக்குத் துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் சென்று கொண்டிருந்தது. 

Advertisment

அப்போது விமானத்தில் தொழில்நுட்பகோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை விமானி கண்டுபிடித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் நீண்டநேரமாக முயற்சித்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறை சரி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானத்தின் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து இந்த விமானத்தில் இருந்த 130 பயணிகளும் பத்திரமாக விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்த பின்னர் மீண்டும் இந்த விமானம் துபாய்க்குச் செல்லும் என இந்திய விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.