Advertisment

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

trb

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றிற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார்  4 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

Advertisment

அதில் மொத்​தம் 150 மதிப்​பெண்​கள் கொண்ட தகுதித் தேர்வில் பொதுப்​பிரி​வினர் 60 சதவீதம் அல்லது 90 சதவீதம் மதிப்​பெண்​ணும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்ணும் பெற்றால் தேர்ச்சி அடைந்தவர்களாகக் கருதப்படுவார்கள். அதேபோன்று, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் புதிய உத்தரவின்படி குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகளை நேற்று (30.01.2025) மாலை வெளியிட்டது. முன்னதாக நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டுமானால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என 2009ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகு சில நியமனங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமலே சில மாநிலங்களில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தாலும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுத் தான் பணியில் தொடர முடியும் என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

result examination teachers TRB EXAM tet exam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe