Advertisment

'பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்'- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

A5066

'Teacher eligibility test mandatory to continue in service' - Supreme Court ruling Photograph: (VERDICT)

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர வேண்டுமானால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET ) எழுதி வெற்றிபெற வேண்டும் என 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. 

Advertisment

அதற்குப் பிறகு சில நியமனங்கள் TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமலே சில மாநிலங்களில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தாலும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுத் தான் பணியில் தொடர முடியும் என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இந்த சட்டம் வருவதற்கு முன்பாகவே பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஓய்வுபெற ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே இருந்தால் அவர்கள் ஆசிரியர்களாக தொடரலாம். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய வாய்ப்பிருக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டும் இல்லையென்றால் அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றலாம் அல்லது  கட்டாய ஓய்வு பெறலாம் என வழக்கை விசாரித்த நீதிபதி திபான்கர் தத்தா தீர்பளித்துள்ளார். 

மேலும் சிறுபான்மை நிறுவனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா? அல்லது நடைமுறை உரிமைகளை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் குழுவுக்கு வழக்கை நீதிபதி  திபான்கர் தத்தா பரிந்துரைத்துள்ளார்.

verdict tet exam teacher suprem court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe