சென்னையில் நாளை முதல் டீ மற்றும் காபி விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisment

நாளை முதல் சென்னையில் ஒரு கிளாஸ் டீ 12 ரூபாயிலிருந்து மூன்று ரூபாய் உயர்த்தி 15 ரூபாயாக விற்கப்பட இருக்கிறது. அதேபோல் காபி விலை 15 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஏற்றம் செய்யப்பட்டு 20 ரூபாயாக விற்கப்பட இருப்பதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பால் விலை உயர்வு மற்றும் காபி தூள், டீ தூள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் இந்த விலை ஏற்றம் நாளை முதல் அமலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.