Advertisment

வரிவிதிப்புத் தொடர்பான எச்சரிக்கை : ரிவர்ஸ் கியர் எடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

donald-treump

சமீபத்தில் 50% வரியினை விதித்து இந்தியாவிற்கு அதிர்ச்சியளித்தது அமெரிக்க அரசு. இந்த வரிகளை குறைப்பதற்க்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்களும் வெளியாகின. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபரை கைது செய்தது அமெரிக்க அரசு. இதற்கு, உலக அளவில் பல நாடுகளில்  இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இருப்பினும், இதையெல்லாம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

Advertisment

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு தன்னைத் தானே செயல் அதிபராகவும் அறிவித்துக்கொண்டார். இதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல வகையில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளப்போவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது மீண்டும் அமெரிக்கா மீது உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் சுயாட்சி பெற்ற பகுதியாகும். இந்த பகுதி புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகவும் இது உள்ளது. 

Advertisment

இதன் காரணமாக, இந்த பகுதியை அமெரிக்கா கைப்பற்றத் துடிப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளின் முடிவைத் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே போன்ற நாடுகள் மீது 10% வரி விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், இது வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. 

trump-ani-mic

இந்த நிலையில், இந்த வரி விதிப்பது சம்பந்தமான முடிவில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் அரசியல் யுக்தி குறித்தான விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும், இந்த வரி விதிப்பு வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 25 சதவீதமாக உயரும் என்று ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

America PRESIDENT DONALD TRUMP tax usa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe