TASMAC theft- Police catch him red-handed Photograph: (tasmac)
திருவள்ளூரில் டாஸ்மாக் கடை ஷட்டரை இயந்திரத்தால் வெட்டி திருட முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அது தொடர்பான நபரை சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தச்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று ஒதுக்குபுறமான புதர்மண்டிய பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் கடையை மூடி விட்டு சென்ற கடையின் மேலாளர் சிசிடிவி காட்சியை மொபைல் மூலம் அக்சஸ் செய்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை வெட்டு இயந்திரத்தால் வெட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று திருட முயன்ற இளைஞரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.