Tasmac employees protest by closing shops - Liquor drinkers protest demanding reopening Photograph: (TASMAC)
காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறையானது அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் டாஸ்மாக் தொடர்பான மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் மட்டும் என்பதுக்கும் மேற்பட்ட கடைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இதனால் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை முகாமிட்டுள்ள மதுகுடிப்போர் 'கடையை திறங்கள்.எங்களுக்கு மது வேண்டும்' என கூச்சலிட்டு வருகின்றனர்.