தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி 1 ம் நாள் தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. அதே நாளில் வள்ளலார் நினைவு தினமும் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு (டாஸ்மாக்) விடுப்பு அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. பொதுவாக, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 போன்ற தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்படுவது வழக்கம், இந்தநிலையில் வருகின்ற பிப்ரவரி 1 அன்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில், சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) உள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக ஒரு நாளைக்கு 100 கோடிக்கும் அதிக அளவிலான வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த வருமானம் பலமடங்கு அதிகரிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதாவது, இத்தகைய நாட்களில் 700 முதல் 750 கோடி வரையிலான வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தைப்பூசத்தன்று மதுபானக் கடைகளுக்கு விடுப்பு அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விடுமுறையையொட்டி மதுபான விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்னர், அரசு சார்ந்த மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் திறக்கப்படக்கூடாது. ஒருவேளை, உத்தரவை மீறி இயங்கும் மதுபான கடைகள் அல்லது மதுபான கூடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/767-2026-01-29-17-36-32.jpg)