Advertisment

வெல்டிங் பணியின் போது வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி- இருவர் காயம்

a5323

Tanker lorry explodes during welding work - two injured Photograph: (lorry)

சாலையில் பழுதாகி நின்ற டேங்கர் லாரியை வெல்டிங் வைத்து பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்படுகிறது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் பரபரப்பான சாலையில் டேங்கர் லாரி ஒன்று பழுதாகி நின்றது. அதை வெல்டிங் வைத்து பழுது பார்க்கும் பணியில் இரண்டு ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு ஊழியர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சாலையில் சென்றவர்கள் இதனால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தில் பயந்து ஓடினர். அதேபோல சாலையின் ஓரத்தில் இருந்து இரண்டு கடைகள் இந்த சம்பவத்தால் முற்றிலும் சேதம் அடைந்தது. காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

thiruvallur accident tankerlorry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe