Advertisment

கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள் மீட்பு; திருப்பிய அனுப்பிய அதிகாரிகள்!

4

ஆந்திர மாநிலம் சித்தூர் அருத்த கொல்லமடுவு பகுதியில் ரங்கநாதன் என்பவருக்கும் சொந்தமான செங்கல் சூலை இயங்கி வருகிறது. இந்த செங்கல் சூலையில், வேலூர் மாவடம் லத்தேரி மற்றும் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியை சேர்ந்த குடும்பத்தார் 17 பேர் இரண்டு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருப்பதாகவும் அவர்களை மீட்டு தரக்கோரி அவர்களின்உறவினரான சின்னம்மாள் கடந்த 22 ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடத்தில் மனு அளித்திருந்தார்.

Advertisment

இதுக்குறித்து உடனடியாக ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த புகாரினை தெரிவித்து நடவடிக்கை எடுக்கசொல்லி கேட்டுக்கொண்டார். இந்த நடவடிக்கையின் பேரில் சித்தூரில் செங்கல் சூலையில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த இரண்டு ஆண்டுகள், 3 பெண்கள், 7 சிறுவர்கள், குழந்தைகள் என என 12 பேரை சித்தூர் வட்டாட்சியர் மீட்டுள்ளார். மேலும், அவர் மீட்கப்பட்டவர்களை சித்தூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தாசில்தாரிடம் 12 பேரையும் ஒப்படைத்தார். இந்த 12 பேருக்கான முறையான விடுவிப்பு சான்று சித்தூர் வட்டாச்சியர் தராததால் குடியாத்தம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் விடுவிப்பு சான்று கேட்டுள்ளனர்.

Advertisment

ஆனால், சித்தூர் வட்டாட்சியர் விடுவிப்பு சான்றிதழ் இல்லை எனக்கூறியுள்ளார். அப்படியாயின் அவர்களை ஏற்கமுடியாது எனச்சொன்னதும் அவர் சித்தூரில் உள்ள உயர்அதிகாரிகளிடம் பேசிவிட்டு 12 பேருக்கான விடுவிப்பு சான்று நாளை வழங்குவதாக சித்தூர் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அதனை கேட்ட குடியாத்தம் வட்டாட்சியர், “மீட்கப்பட்ட 12 பேரையும் உடன் அழைத்துச் செல்லுங்கள், விடுவிப்பு சான்றிதழ் வழங்கும்போது இவர்களை ஏற்றுக்கொள்கிறோம்..” எனச்சொல்லி அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

சித்தூர் அதிகாரிகள் அந்த செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தால் மட்டுமே 12 பேரை மீட்பதற்கான சான்றிதழை விதிகளின்படி தரமுடியும். வழக்கு பதிவு செய்யாமல் விட்டுயிருந்தால் விடுவிப்பு சான்றிதழ் வழங்கமுடியாது. அதனால் இனிமேல் அவர்கள் அதற்கான சான்றிதழ் தந்தால் மட்டுமே அவர்களை நாம் கொத்தடிமையாக இருந்தவர்கள் என்கிற கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கான அரசு நிதியுதவியை தரமுடியும். அதனாலயே அவர்களிடம் விடுவிப்பு சான்றிதழ் கேட்கப்பட்டது என்கிறார்கள்.

வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் பெரும்பான்மையாக தமிழ்நாடு - ஆந்திரா மாநில எல்லையை ஒட்டியே உள்ளன. தமிழ்நாடு மலைவாழ் மக்களிடம், நல்ல கூலி எனச்சொல்லி அழைத்துச்சென்று சட்டவிரோதமாக செம்மரம் வெட்டவைத்து அவர்களை போலிஸில் சிக்கவைத்துவிட்டு, அவர்களை காப்பாற்றாமல் விட்டுவிடுகின்றனர். இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் மீது ஆந்திராவில் வழக்குகள் உள்ளனர். அதே வரிசையில் செங்கல் சூளையில் நல்ல வேலை, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று விடியற்காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை வாங்குவது, தங்க சரியான இடம் தராமல் ஓலை கொட்டகையில் தங்கவைப்பது, குழந்தைகளையும் வேலை வாங்குவது, தனிசரி 150 முதல் 200 ரூபாய் வரையே கூலி வழங்குவது என அடிமையாக வைத்திருக்கின்றனர். 

பெரும்பாலான ஆந்திரா செங்கல் சூளை உரிமையாளர்கள், தலைக்கு 30 ஆயிரம, 40 ஆயிரம் என தந்து மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொள்வது. அதற்கான வட்டி என்கிற பெயரில் பணம் எடுத்துக்கொண்டு மீதி சொச்ச பணத்தை கூலியாக வாராவாரம் தருவது போன்றவற்றால் நூற்றுக்கணக்கான மக்கள் ஆந்திராவின் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருக்கின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Andhra Pradesh people Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe