Advertisment

“தி.மு.க.வை இளைஞர்கள் புறக்கணிப்பார்கள்” - தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்!

tamilisai-soundararajan

கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில், தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07.02.2026) மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்சி தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவின் இளைஞரணி மாநாடு விருதுநகர் மண்ணில். அதற்காகவே இந்த மாநாட்டை தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிப்பார்கள்.

Advertisment

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு  கல்வி தந்த காமராஜரை அவதூறு பேசி அவர் சொந்த மண்ணிலேயே தோற்கடித்த கொடுமைக்காக இந்த இளைஞர் அணி மாநாடு புறக்கணிக்கப்பட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்த இளைஞன் உதயகுமாரின் மரணத்தை மனதில் வைத்துக் கொண்டு இளைஞர்கள் இந்த திமுகவை நிராகரிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் உதயநிதி தலைமையில் ஈர்க்கப்பட்டு  இருக்கிறார்கள் என்று சொல்கிறார் முதலமைச்சர். இன்றைய இளைஞர்கள் விரும்புவது சுய முன்னேற்றம். ஆனால் யார் இந்த உதயநிதி? இந்த உதயநிதி மொழி  போராட்டத்தில் சிறை சென்றவரா?.

Advertisment

திமுகவின் வளர்ச்சிக்கு தெருத்தெருவாக சென்று உழைத்து மேலே வந்தவரா?. எந்த மாணவர் இயக்கம் மற்றும் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்?. இந்த தகுதியோடு லட்சோப லட்ச இளைஞர்கள் இருக்கும் பொழுது தன் மகன் என்று ஒரே காரணத்திற்காக இன்று உதயநிதியை இளைஞர் அணி தலைவராக போற்றிக் கொண்டிருப்பதற்காக இளைஞர்கள் திமுகவை புறக்கணிப்பார்கள்!. சொந்த மகனின் பாசம் இன்று இந்த காணொளியில் முழுவதுமாக அவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் முதலமைச்சர் சகோதரர் அழகிரி வெறுப்புக்காக மதுரை தினகரன் எரிப்பதற்கு காரணமாக இருந்து ஊழியர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததற்காகவாவது இளைஞர்கள் திமுகவை புறக்கணிப்பார்கள்.

vdu-dmk-meet

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான படிப்பதற்கான வாய்ப்பை குறைத்து விட்டு குடிப்பதற்கான வாய்ப்பை அதிகரித்து இருப்பதற்காக திமுக இளைஞர்கள் புறக்கணிப்பார்கள். அஞ்சாமல் கடமையாற்ற வேண்டிய இளைஞர்களை கஞ்சாவை வைத்து சீரழித்துக் கொண்டிருப்பதற்காக இளைஞர்கள் திமுகவை புறக்கணிப்பார்கள்... நல்ல பாதையில் செல்ல வேண்டிய இளைஞர்களை போதை கலாச்சாரத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் திமுகவை இளைஞர்கள் புறக்கணிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Virudhunagar Udhayanidhi Stalin mk stalin b.j.p youth wing dmk Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe