Advertisment

“இரட்டை இலையோடு தாமரை மலர்ந்தே தீரும்...” - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

tamilisai-speak

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண யாத்திரைத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில்  மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார் அவரது திட்டங்களை பற்றி சொன்னால் அவருக்கு மூச்சு வாங்குகிறதாம். நான் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று சொல்கிறேன். 

Advertisment

கல்லூரி பேராசிரியர்கள் பதவி உயர்வு கேட்டு போராட்டம். தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம். இளநிலை ஆசிரியர்கள் ஊதியம் கேட்டு போராட்டம். மருத்துவர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் ஊதிய பாக்கி கேட்டு போராட்டம். எயட்ஸ் கட்டுப்பாடு சஙக ஊழியர்கள் ஊதியம் கேட்டு போராட்டம்.  செவிலியர்கள் பணிச்சுமை அதிகரிப்பு என்று கூறி போராட்டம். அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம். சத்துணவு பணியாளர்கள் உரிமை மறுக்கப்பட்டதாக கூறி போராட்டம். தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம்.

Advertisment

நெடுஞ்சாலை பணியாளர்கள் போராட்டம் என இப்படி வாழ்க்கையே போராட்டம் ஆகி கொண்டிருக்கும் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே எப்படி திமுக 2.0வாக மாறும். 2.0வாக இல்ல உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். ஏனென்றால் இன்று கூட பார்த்தீர்கள் என்றால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கோயிலுக்கு போகும் போது அவர் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சேகர் பாபு விரட்டி அடிக்கப்பட்டார். நான் இன்று ஒரு சவால் விட்டேன். சேகர் பாபு அவர்களே 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தேன் என்று சொல்கிறீர்களே. ஒரு குடமுழுக்குவிற்காவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்திருக்கிறார்களா என்று கேட்கிறேன்.

cm-mks-sad

முதலமைச்சர் வரமாட்டார். மத சார்பில்லாதவர்கள் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் தான். ஏனென்றால் புதுக்கோட்டை காவிக்கோட்டையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல இன்று ஜார்ஜ் கோட்டையை  அடைவதற்கு இங்கே அடித்தளம் அமைக்கப்படுகிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் மோடியின் டபுள் இன்ஜின் கவர்மென்ட் இங்கே வர வேண்டும் என்றால் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். படிக்க வர வேண்டிய மாணவர்கள் பட்டா கத்தியோடு வருகிறார்கள். கத்தி கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியோடு வருகிறார்கள். நல்ல பாதையில் போக வேண்டிய மாணவர்கள் போதையில் வருகிறார்கள். 

இதே மாவட்டத்தில் இருந்து வைகோ போதையை ஒழிக்க அவர் பாதயாத்திரை செல்கிறாராம். ஆனால் போதையை ஒழிப்பதற்கு இந்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாடகம் ஆடி கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் ஒரு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அது பழைய ஓய்வுதிய திட்டமா?. புதிய ஓய்வுதிய திட்டமா?. இல்லையென்றால் பழைய புதிய ஓய்வுதிய திட்டமா?. இல்லையென்றால் புதிய பழைய ஓய்வுதிய திட்டமா? என்று யாருக்கும் தெரியாது. ஆகவே அதனால் இன்று சொல்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வந்தால் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் படிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். 

eps-amitsha-sitting
கோப்புப்படம்

அதனால் தமிழகத்தில் கைகள் உயர்கிறதோ இல்லையோ இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்கிறார் எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் எங்களை ஒன்றும் சொல்ல முடியாது செய்ய முடியாது என்கிறார். ஸ்டாலின் அவர்களே சரித்திரத்தை புரட்டி பாருங்கள் இதற்கு முன்னாள் கே.கே. ஷாதான் உங்களை வீட்டிற்கு அனுப்பினார். அதேபோல இந்த அமித்ஷா திமுகவை வீட்டிற்கு அனுப்புவார் என்று சொல்லி இரட்டை இலையோடு தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறி  விடைபெறுகிறேன்” என ஆவேசமாக பேசினார். 

dmk admk Amit shah b.j.p mk stalin nainar nagendran pudukkottai Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe