தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்த விரைவில் வரவுள்ளதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், எதிர்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை (என்டிஏ) உறுதிபடுத்தியுள்ளன. இந்த கூட்டணியில் (என்டிஏ) பாமக, பாஜக, அமமுக போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், தனித்து களம் காண உள்ள தவெகவும் தேர்தலில் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. தவெகவிற்கு தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் கிடைத்துள்ள நிலையில், அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

Advertisment

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் செய்தியாளர்கள், என்டிஏ கூட்டணியை திருமாவளவன் விமர்சித்து பேசியது குறித்தும், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை  பதிலளித்தார். அதில், "மக்களுக்காக களத்தில் நிற்க வேண்டிய கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள்? அவர்கள் கூட்டணிக்காக பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்கள். மக்களுக்கான பிரச்சனைகளுக்கு அவர்கள் குரல் கொடுக்கவில்லை. சி.பி.ஐ., விஜய்யை டெல்லிக்கு வரவைத்து விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. 

Advertisment

தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர்  சின்னத்திலும் விசில் இருக்கிறது. அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு தவெகவின் (விசில் சின்னம்) கூட்டனி தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. 

nda-alliance

எங்கள் கூட்டணி உறுதியான கூட்டணியாகத் தான் இருக்கிறது. எங்கள் கூட்டணி குறித்து திருமாவளவன் கவலை படத் தேவையில்லை. அவர்களின் கூட்டணி எந்தநிலையில் இருக்கிறது என்பதைத் தான் அவர் பார்க்க வேண்டும். அவர்களின் கூட்டணி (இந்தியா) இன்னும் உறுதியாகாத நிலையில் தான் இருக்கிறது. அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும், அதிலிருந்து காட்சிகள் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது" என்று கூறியிருந்தார்.

Advertisment