அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. அதில் பிரச்சனைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம், தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று காலை அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. குறிப்பாக மத உணர்வை புண்படுத்துவதாகக் கூறி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்காதது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது,
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “விஜய்யின் இது தான் கடைசி படம் நான் நம்பவில்லை. ஏனென்றால் அரசியலுக்கு ஏதோ ஒரு கனவுல வருவார்கள், கனவு நிறைவேறவில்லை என்றால் உடனே திரைத்துறைக்கு திரும்பி விடுவார்கள். சென்சாருக்கு பா.ஜ.கவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது தனி துறை. ஆனால், அரசியலில் எதிர்கொள்ள முடியாமல் உடனே பராசக்தி என்ற படத்தை விடுகிறார்கள். நாங்கள் சக்தியை வேண்டிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் அரசியலில், சினிமாவையும் போட்டியாக விட்டு அதில் அரசியல் செய்ய வேண்டி இருக்கு. பராசக்தியின் மகனுக்காக நாங்கள் வணங்கிக் கொண்டிருக்கிறோம். முருகன் பராசக்தியின் மகன். நடிப்பவரும், சிவகார்த்திகேயன் தான் இருக்க வேண்டும்.
நீங்கள் நாத்திகம் பேசினாலும் ஆத்திகத்திற்குள் வந்துதான் ஆக வேண்டும். ஆனால் எந்த திரைப்படத்திலும் தவறான கருத்து பதிவு செய்து விடக்கூடாது. நிச்சயமாக டெல்லியை விட பெருசா என்று தேசிய உணர்வுக்கு எதிராக எந்த கருத்தும் இருந்துவிடக்கூடாது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/tamilisaianayagan-2026-01-07-07-26-46.jpg)