கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை, 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், துடியலூரில் உள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர்.  

Advertisment

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த 3 பேரும் குணா (30), சதீஷ் (20) மற்றும் கார்த்திக் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த சில வருடங்களாக கோவை இருவூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளனர் என்பதும், இந்த மூன்று பேர் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisment

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கோயம்புத்தூரில் பா.ஜ.க சார்பில் இன்று (06-11-25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.க தொண்டர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி  இருக்கிறது.  பெண்களுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பு  இல்லை. கோவை மாதிரி ஒரு நகரத்திலேயே  இந்த அளவிற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஒரு  பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதை  சொல்வதற்கே எனக்கு வேதனையாக இருக்கிறது.  அந்த நிர்வாணமாக தூக்கி வீசப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பே  நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.    

என்ன நிவாரணம் பெண்களுக்கு? என்று நாங்கள்  கேட்கிறோம்.  வீட்டில் பெண்களை வெளியே அனுப்பிவிட்டு  வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்க  வேண்டிய சூழ்நிலை இன்று இருக்கிறது.  சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த  சூழ்நிலையை போல ஒரு சூழ்நிலை இருக்கிறது.  சுதந்திரம் அடைந்த பின்பு  உடல் முழுவதும் நகையை போட்டுக்கொண்டு ஒரு  பெண் தனியாக நடக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். ஆனால் , ஒரு தோழனோடு கூட நின்று நிற்க முடியாத ஒரு  சூழ்நிலை. அதை  பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதலமைச்சர், எப்படி வெற்றி  பெற வேண்டும் என்று மீட்டிங் நடத்திட்டு இருக்கார்.     எஸ்.ஐ.ஆருக்கு சர்வ கட்சி கூட்டம் போடுறீங்களே, பெண்களை எப்படி  பாதுகாக்க வேண்டும் என்று கூட்டம் போடுறீங்களா? அதிகாரிகள் கூட்டம்  போடுறீங்களா?

Advertisment

போலீஸ்காரங்க குற்றவாளிகளை சுட்டு  பிடித்தாங்களாம். நீங்க ஒன்னும்  சுட்டு பிடிக்க வேணாம். இன்னும் கொஞ்ச  நாளில் நாங்கள் எல்லாருமே துப்பாக்கி  வச்சிருக்க சூழ்நிலை வரும். நாங்களே சுட வேண்டிய  சூழ்நிலை இன்றைக்கு தமிழகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கத்தியோ மிளகாய் பொடியோ உங்களுக்கு  பத்தாது, கத்தியோ துப்பாக்கியோ வச்சுதான்  சுடணும்.    ஒரு அரசாங்கத்தினால் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?. என்ன நடந்து கொண்டிருக்கிறது?.

எல்லா விதத்திலும் போதை  நடமாடிக் கொண்டிருக்கறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அதை  பற்றி முதல்வர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனால் முதலமைச்சர் ஸ்டாலின்  பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் பதவி விலகுங்கள். ஒரு பெண்ணுக்கு கூட நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஆட்சியில்  அமர்வதற்கும், தொடர்வதற்கும் எந்த தார்மீக  உரிமையும் இல்லை. பெண்கள் ஆயுதத்தை எடுக்க வேண்டிய காலம் தமிழகத்தில் வந்திருக்கிறது என்று  நான் நினைக்கிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு பெண்  மேல் கை வச்சா கை இருக்காது” என்று கோபமாகப் பேசினார்.