தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (01.01.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஒரு போராட்டங்கள் இல்லாத ஒரு மாநிலமாக இது திகழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இன்றைய காலகட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எல்லா கட்சித் தலைவர்களுக்கும் நாங்கள் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

Advertisment

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் ஒரு பாரபட்சமான ஒரு நிலை இருக்கிறது. இந்துக்கள் என்றால் வாழ்த்து சொல்லாத ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு எல்லோரும் சமமாக வாழ வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். ஆனால் தமிழ்நாட்டில் வட இந்தியர்களைப் பற்றி எப்பொழுதுமே ஒரு விஷ கருத்துக்களைப் பதிவு செய்து இளைஞர்களுக்கு வட இந்திய இளைஞர்களைப் பார்த்தால் ஒரு கோபம் ஏற்படும் அளவிற்கு ஒரு வேற்றுமையைத் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் அவரோடு இணைந்து பணியாற்றுபவர்கள் எல்லாம் விதைத்திருக்கிறார்கள். 

Advertisment

இது தேசிய ஒற்று ஒற்றுமைக்கு ஒரு அச்சுறுத்தலாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும், திராவிட முன்னேற்ற அரசும் இருக்கிறது. அதே மாதிரி இன்று எல்லாரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற காலத்தில் ஒரு வாழ்த்து சொன்னால் கூட அதில் பாஜகவின் எதிர்க்கருத்தை முதலமைச்சராக இருக்கட்டும், துணை முதலமைச்சர் உதயநிதியாக இருக்கட்டும் தொடர்ந்து பாஜகவை விமர்சித்துக் கொண்டு உள்ளனர். 

mks-5

அவ்வாறு விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எப்போது பார்த்தாலும், தூக்கத்தில் இருந்தால் கூட பாஜக, பாஜக என்று சொல்வதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதே சமயம் இந்தியா கூட்டணி மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறது. அவர்கள்  இந்த தேர்தலைச் சந்திக்கும் பொழுது மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பார்கள். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் இந்தியா கூட்டணியில் தான் இருப்பார்களா என்று மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.  

Advertisment