தமிழக முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மார்ச் 1ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

கால்நடை நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஏழை மகளிர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்று தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும், பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரிசு நில உரிமையை பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை திரும்ப பெற்று ஏழை மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும், சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி அதன்படி கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் 39 நாடாளுமன்ற தொகுதிகளை சுழற்சி முறையில் தனித் தொகுதிகளை மாற்ற வேண்டும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி மையங்களை அகற்ற வேண்டும், செஞ்சிக்கோட்டையை யுனெஸ்கோ அமைப்பு மராட்டியர்கள் கட்டியது என அறிவித்ததை வன்மையாக கண்டிக்கப்படுகிறது. செஞ்சிக்கோட்டையை கட்டி ஆட்சி செய்த ஆனந்த கோன் திருவுருவ சிலையை செஞ்சிக்கோட்டையின் நுழைவாயிலில் அமைக்க வேண்டும், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் மேய்ச்சலுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது இறக்கும் கால்நடைகளுக்கு அரசு அதிக இழப்பீடு வழங்க வேண்டும், திருவண்ணாமலை முதல் திண்டிவனம் வரையிலான ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு ஆசிரியர்கள் பணியாற்றப்படுகிறார்கள், அதனால் தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் நல வாரியம் உருவாக்கி அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களே அதில் பணி நியமனம் செய்து தகுதியான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisment

tha2

இக்கட்சியின் நிறுவனத் தலைவரான செங்கம் கு.ராஜாராம் பேசும் போது, ‘அரசியல் கட்சியாக இருந்து கொண்டு நாம் குரல் கொடுத்தால் தான் அதிகாரத்தின் காதுகளில் விழும் என்பதாலேயே நாம் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளோம். நமது கோரிக்கைகள் எல்லாம் நமது மக்களுக்கானதாகவே இருக்கும். நாம் இந்த தேர்தலில் போட்டி போட தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்கிறோம். சின்னம் நமக்கு ஒதுக்காத பட்சத்தில் யாதவ சமுதாயத்திற்கு எந்த அரசியல் கட்சி நமக்கு கோரிக்கைகளை ஏற்று நல்லது செய்கிறோம் என வாக்குறுதி தருகிறார்களோ அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அந்த வேட்பாளரை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்போம். செஞ்சி கோட்டை யாதவர்களின் கோட்டை அந்த வரலாற்றை மறைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்த வரலாற்றை நாம் மீட்டெடுப்போம்’ என கூறினார்.

படங்கள் - எம் ஆர் விவேகானந்தன்