பராசக்தி படம் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முதன்மை துணை தலைவர் அருண் பாஸ்கர் தெரிவித்துள்ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களின் கவனத்திற்கு பராசக்தி படம் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம் படத்தில் இடம் பெற்ற சில முக்கிய கண்டிக்கத்தக்க காட்சிகள்: 1 அனைத்து மாநிலங்களிலும் உள்ள தபால் அலுவலகங்களில் ( Post Office) இந்தியில் மட்டும் தான் படிவங்கள் இனி நிரப்பப்பட வேண்டும் என்று 1965ல் காங்கிரஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

Advertisment

இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்டுக்கதை.  2.) படத்தில் இந்திரா காந்தியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசுகிற மாதிரியும், அதன் பின் இந்திரா காந்தி வில்லத்தனமாக பேசும் வண்ணம் வசனங்களை வைத்துள்ளார்கள். இந்த படத்தை தயாரித்த முட்டாள் கூட்டத்திற்கு மறைத்த தலைவர்களை திரையில் காண்பிக்கும் போது வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை கற்பனையாக காண்பிக்க கூடாது என்பது சட்டத்தில் உள்ளது என்பதே தெரியாமல் படத்தை அவர்கள் இஷ்டத்திற்கு வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை எடுத்துள்ளார்கள். 

Advertisment

இன்னும் ஒரு படி மேலே சென்று 12  பிப்ரவரி 1965 அன்று கோயம்புத்தூருக்கே வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாக படமாக்கி அவர் கண் முன் ரயில் எரிந்து வந்து இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து கொடுக்கும் காட்சியெல்லாம் வரலாற்றில் நடைபெறவே இல்லை அதை படமாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இறுதியில் படம் முடிந்த பிறகு முடிவில் (End Credits) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அன்றைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி  என மூவரின் நிஜ புகைப்படத்தை காண்பித்து காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தமிழர்களை பொள்ளாச்சியில் சுட்டுக் கொன்றது என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியையும் தலைவர்களையும் பொய்யான தரவுகளுடன் சித்தரித்துள்ளது.

parasakthi

இதை தவிர காங்கிரஸ் கொடியை எரிக்கும் காட்சியையும் படத்தில் திணித்துள்ளனர். ஆக மொத்தம் இந்த படம் முழுவதுமே சித்தரிக்கப்பட்ட சொந்த கற்பனையில் வரலாற்றுக்கு முற்றிலும் முரணாக காங்கிரஸ் கட்சியை தாக்கும் வகையில் பல பொய்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். பராசக்தி படத்தில் உள்ள வரலாற்றில் நடைபெறாத அனைதது காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். படத்தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் படக்குழு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment