அல்கொய்தா பயங்கரவாதிகள் இயக்கத்தால். மாலி நாட்டில் ஆயுத முனையில் இந்திய தமிழகத் தொழிலாளர்கள் ஐந்து பேர் கடத்தப்பட்டதால் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள அவர்களின் குடும்பத்தார்கள் தென்மாவட்டங்கள் பீதியிலும், அச்சத்திலும் உறைந்து போயிருக்கிறார்கள். மட்டுமல்ல இந்தக் கடத்தல் பயங்கரம், தொடர்புடைய மாவட்ட அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.ஏனெனில் தீவிரவாதிகளின் கடத்தல் கெடுபிடிகள் டிமாண்ட்கள் அப்படியானவையாம்.

Advertisment

நவ-06 இரவு 10 மணி. மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி நாட்டின் கோப்ரி நகரத்தின் இந்திய தொழிலாளர்கள் தங்குகிற முகாமிற்குள் ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழு ஒன்று, திடீரென்று புகுந்து கேட் பகுதியில் துப்பாக்கியுடனிருந்த காவலாளியை அடித்துத் தள்ளி விட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறது. வேலை முடிந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த தொழிலாளர்களை ஆயுதத்தால் தட்டி எழுப்ப பீதியில் மிரண்டிருந்த அவர்களை அப்படியே கடத்திச் சென்றிருக்கிறது அந்த ஆயுதக் கும்பல். இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு இதுவரையிலும் எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லையாம். தாமதமாகவே இது வெளியே தெரியவர மாலியின் தலைநகர் பமாகோ-விலிருக்கிற அந்நிறுவனம் பதறியதுடன், அந்த முகாமிலுள்ள அத்தனை தொழிலாளர்களையும் வெளியேற்றியிருக்கிறது.

Advertisment

இதையடுத்தே கடத்தப்பட 5 பேரில் இசக்கிராஜா, தளபதி சுரேஷ் இருவரும் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து மூவரும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பக்கமுள்ள ஏரியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்ததும் அவர்களின் குடும்பத்தார்கள் கதறிக் கண்ணீர் துயரத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

புளியரைப் பகுதியிலிருக்கிற எனது உறவினர் மூலம் தான் எனது கணவர் இசக்கிராஜாவும் மற்றவர்களும் கடத்தப்பட்டதே தெரியவந்தது. வேறு எந்த வழியும் தெரியாததால் எனது கணவரை மீட்டுத்தர வேண்டி தென்காசி மாவட்டக் கலெக்டரிடம் மனு அளித்திருக்கிறேன் என்று கண்ணீர் கொட்டச் சொன்ன பீரவீனாவைப் போன்று மற்ற நான்கு பேரின் உறவினர்களும் அவரவர்களுடைய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளிக்க, இதனால் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டப் பகுதிகள் பீதியிலும் அச்சத்திலும் மிரண்டு போயிருக்கின்றன.

Advertisment

எந்த நோக்கத்திற்காக இந்தியத் தொழிலாளர்கள் அல்கொய்தா இயக்கத்தால் குறிவைக்கப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். விடுப்பின் மூலம் அண்மையில் ஊர் திரும்பிய தென்காசி மாவட்டத்தின் புளியரை மற்றும் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாலியில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களான ஜெயக்குமார் மற்றும் ஜோசப் இருவரிடமும் பேசியதில்.மாலி நாட்டில் மின்சாரப் பணிகளுக்கான கட்டமைப்பிற்காக, மின்வாரியப் பணிகளை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த மிகப் பெரிய தனியார் நிறுவனமான டிரான்ஸ்ரைல் லைட்டிங் பிரைவேட் லிமிட் (TRANSRAIL LIGHTING PVT) என்ற நிறுவனம் மேற் கொண்டு வருகிறது. உலகளவில் 66 நாடுகளில் நிறுவனங்களைக் கொண்ட பெரிய மின்வாரிய நிறுவனம்.

தமிழகத்தைவிட சற்று சிறிய அளவிலான மாகாணம் தான் மாலி. அங்கே கட்டுமான பணிகளை மேற் கொண்டு வருகிற இந்த நிறுவனம் தற்போது மாலியின் மேற்கு பகுதியிலுள்ள கோப்ரி, நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்மயமாக்கல் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல மாநிலங்களிலுள்ள தொழிலாளர்கள், குறிப்பாக தென்மாவட்டத்தின் தூத்துக்குடி, தென்காசி, நெல்லையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். ஹெவி டவர் லைன்கள் அமைத்து வருகின்றனர்.

DSC_0972

இந்திய கரன்சியில் 95 ஆயிரம், 80 ஆயிரம் ரூபாய் என்ற மதிப்பிலான 1200 முதல் 1500 வரையிலான யு.எஸ். டாலரில் அவர்களுக்கான மாதச்சம்பளம் பிரதிமாதம் 6ம் தேதியன்று சரியாகக் கொடுத்துவிடுகிற சிஸ்டத்தைக் கொண்ட அந்நிறுவனம், தொழிலாளர்களுக்கு மேல் நிலையிலிருக்கிறவர்களுக்கு தகுதிப்படி கூடுதலாகவும் அளித்து வருவதால் தான் மாலி நாட்டிற்கு இங்குள்ளவர்களின் போக்கு அதிகரித்திருக்கிறது. இதே போன்ற கட்டமைப்பில் தான் அங்குள்ள இந்திய நிறுவனங்களின் சிமெண்ட் தயாரிப்பும் இயங்கி வருகின்றன. இவை தவிர மின் நிறுவனம் தன் தொழிலாளர்கள் தங்குவதற்காக மாலியின் பல பகுதிகளில் தங்குகிற முகாம்களை அமைத்துக் கொடுத்ததுடன் அவர்களுக்கான உணவு தயாரிப்புகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.

சூழல்கள் இப்படியிருக்க, எற்கனவே ராணுவ ஆட்சியின் கீழிருக்கும் மாலியில் தற்போது அங்குள்ள ஆயுதம் ஏந்திய பயங்கரவாதப் படைகளுக்கும் ராணுவப் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. உலக அளவிலான பயங்கரவாத இயக்கமான அல்கொய்தாவும், ஐ.எஸ்.எஸ்.-சும் மாலியின் பயங்கரவாதப் படைகளின் பின்னணியிலியிருந்து செயல்படுவதால் அந்தப் படைகள் ராணுவ ஆட்சியை மூர்க்கமாகவே எதிர்த்து வருகின்றன. இதனால் பயங்கரவாதப்படைகளை ராணுவ ஆட்சி எதிர்கொள்ள முடியாமல் திணறிவருகிறது. இது ஒருபுறமிருந்தாலும் அரசு ராணுவ ஆட்சி மாலியிலுள்ள மக்களின் நலன்களை மேலோட்டமாகக் கொண்டாலும் அங்கு பணிபுரிகிற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு இன்னபிற பணிகளை ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லையாம். ஏன் என்று கூடக் கேட்பதில்லை. மொத்தத்தில் தொழிலாளர்களோ நாதியற்ற நிலையில்.

அண்டையிலுள்ள சவுத் ஆப்ரிக்கா, நைஜீரியா நாடுகளில் ராணுவ ஆட்சியிருந்தாலும் குறிப்பாக மாலியின் எல்லையை ஒட்டியுள்ள ஃப்ர்கினா பாஸோ BURKINA FASO நாடு கூட ராணுவ ஆட்சியிலிருந்தாலும், அந்த ஆட்சி நிர்வாகம், மக்கள் நலன், பிறவைகளில் அக்கரையாக செயல்படுவதுடன் கட்டுப்பாடிருப்பதால் அங்கே மாலியைப் போன்று உள்நாட்டு பயங்கரவாத கிளர்ச்சிகள் எட்டிப்பார்க்கவே முடியாது.அண்டை நாடுகள் இப்படிக் கட்டுக் கோப்பிலிருந்தாலும் மாலி எப்போதுமே பதற்றச் சூலாடுகிற நிலை.

இந்த நிலையில் தான் மாலியின் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதப் படைகள் தங்களின் ஆயுதங்களுக்காக அவ்வப்போது அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளிகளை கடத்திச் சென்று பிணைத் தொகை கெடு வைத்து விடுவார்கள். இப்படி அடிக்கடி தொழிலாளர்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை கூட ராணுவ ஆட்சி மேற்கொள்ளாததால் கடத்தப்பட்ட தொழிலாளர்கள் பணிபுகிற நிறுவனமே இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாலும் சம்பவத்தால் தொழிலாளர்கள் இங்கே எட்டிப் பார்க்கமாட்டார்களே என்ற பீதியில் தீவிரவாதக் கடத்தல்காரர்கள் வைக்கிற பிணைத் தொகையை கெடு நாட்களுக்குள் செலுத்தி அவர்களை மீட்டுக் கொண்டு வருமாம். இந்த டீலிங் கம்பெனி தீவிவாதப்படை இவர்கள் மட்டத்திற்கு மட்டுமே தெரிகிற விஷயம். வெளியே தெரிய வாய்ப்பில்லை. கெடுவிற்குள் தீவிரவாதப் படைக்கு பிணைத் தொகை போகாவிட்டால், கடத்தப்பட்டவர்களின் நிலை, அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமலேயே போன சம்பவமும் நடந்திருக்கு.

டிரான்ஸ்ரைல் லைட்டிங் நிறுவனம் தன் தொழிலாளர்களுக்கென்று அமைத்த அந்த முகாமின் ஒரு அறையில் தூத்துக்குடி மாவட்ட ஒட்டப்பிடாரம் பகுதியின் நான்கு பேர், தென்காசி மாவட்ட கடையநல்லூர் ஏரியாவின் 3 பேர் என்று ஏழு தொழிலாளர்கள் தங்கியிருந்ததில் அன்றைய தினம் இரவு அவர்களில் 5 பேர் உறங்கிக் கொண்டிருக்க, ஒட்டப்பிடாரம் மணிகண்டன், கடையநல்லூர் சிவபாலன் இருவரும் முகாமின் வெளிப்பக்கமிருந்திருக்கிறார்கள் சிவபாலன் தன் செல்லைப் பார்த்துக் கொண்டிருக்க, மணிகண்டனோ அங்குள்ள இன்னொரு பக்கமாகச் சென்று செல் போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

எதிர்பாராத நிலையில் அந்நேரம் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் முகாம் காவலாளியை அடித்துத் தள்ளி விட்டு தொழிலாளர்களின் அறைக்குள் நுழைய முயன்ற சமயம் எதிர்ப்பட்ட சிவபாலனின் செல்லைப் பறித்தவர்கள் அவரைத் தாக்கியதில் அவர் அலறித் தப்பிக்க, சப்தம் கேட்டு நிலை பதறிய மணிகண்டன் சுவரேறித் தப்பியோடிருக்கிறார். உள்ளே புகுந்த பயங்கரவாத உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரையும் துப்பாக்கிகளால் தட்டியெழுப்ப, முகங்களை மூடியபடி ஆங்காரமாக நின்றவர்களைப் பார்த்த தொழிலாளர்கள் உயிர் பயத்தில் தப்பிக்கமுயல அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் சுற்றி வளைத்த துப்பாக்கிப்படை 5 பேரையும் கடத்திச் சென்றிருக்கிறது.

இரண்டு நாட்களுக்குப் பின்பு தான் இந்தக் கடத்தல் விவகாரம் இங்கே செங்கோட்டைப் பகுதியிலிருக்கிற எங்களின் உறவினர் ஒருவருக்குத் தெரியவர, அவர் எங்களுக்குத் தெரிவித்ததும் ஆடிப்போனோம், கடத்தப்பட்ட தளபதி சுரேஷின் தந்தை முருகேசன் சாதாரண விவசாயக் கூலித் தொழிலாளி, இரண்டு பிள்ளைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கிற இசக்கிராஜாவின் மனைவி பிரவீனா என்று மொத்தக் குடும்பங்களும், அதிர்ச்சியில் பேதலித்துப் போயிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் வைக்கிற டிமாண்ட்டை சரியாக 4-6 நாட்களுக்குள் க்ளீயர் செய்து விட வேண்டும். அது நடந்தா தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தமிழக தொழிலாளர்கள் கடத்தப்பட்டு எட்டு நாட்களாகிறது. தீவிரவாதிகளால் அவர்கள் எந்த நடுக்காட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. அவர்களை மீட்க இங்கே உள்ள ராணுவ ஆட்சி நடவடிக்கை மேற்கொள்ளாது.

DSC_0978

கடத்தப்பட்டவர்கள் பிணையாக வைக்கப்பட்டதில் அவர்களுக்கு பயங்கரவாதிகள் தருகிற அறுவருப்பான மாமிச உணவை வாயில் வைக்கவே முடியாது. மாலியில் அப்படியான உணவுப் பழக்கம் தானிருக்கு. சில வேளைகளில் பழங்கள் கொடுப்பார்கள் அதைத் தான் தொழிலாளர்கள் சாப்பிட நேரிடும். இந்தச் சூழலில் பிணைத் தொகை போய்ச் சேராவிட்டால் எங்கள் தொழிலாளர்களின் நிலை என்னவாகும். நினைத்துப் பாக்கவே ஈரக்குலை கருகுகிறது. இப்படித்தான் கடந்த ஜூனில் இந்திய தொழிலாளர்கள் கடத்தப்பட்டதில் பிணைத் தொகை உரிய கம்பெனி மூலம் போய்ச் சேராததால் பயங்கரவாதிகள் அவர்களை விடுவிக்கவில்லை பீகார், ஜார்க்கண்ட் உ.பி.யைச் சேர்ந்த அந்த தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே போய் விட்டது. அவர்களின் வட நாட்டு குடும்பத்தார்கள் இதனைப் பெரிசுபடுத்தினால் கடத்தல் வெளியே தெரிந்திருக்கும். அப்படியான விழிப்புணர்வு வடமாநிலத்தவர்களிடமில்லாமல் போனதால் தான் சம்பவம் மறைந்தே போகக் காரணமாயிறுச்சி. ஆனால், நம் தமிழ்நாட்டின் நிலை அவ்வாறில்லை. உண்டு இல்லை என்று பார்த்து விடுவார்கள். அதனால் தான் விவகாரம் இந்தளவுக்கு விஸ்வரூபமாயிருக்கிறது. இதே போன்று தான் ஆகஸ்ட்டிலும் கடத்தல் தொழிலாளர்கள் காணாமல் போன சம்பவமும். இப்போது நம் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம்.

இது போன்ற தொடர் கடத்தல் சம்பவத்தால் மீட்பதற்கான பிணைத் தொகையைக் கொடுத்தே சலித்துப் போய் விட்டது டிரான்ஸ் ரைல் லைட்டிங் நிறுவனம். அதனால் தான் தாமதப்படுத்துகிறதா என்று தெரியவில்லை.

பிணைத் தொகை இன்றி விடுவிப்பு சாத்தியமில்லை. ஆனால் அல்கொய்தா ஈவு இரக்கம் காட்டாது என்ன வேண்டுமானாலும் செய்யும். மாலியில் தற்போது 4500 கோடி டாலர் மதிப்பீட்டில் மிகப் பெரிய ப்ராஜைக்ட் வேலையை எடுத்திருக்கிற டிரான்ஸ்ரைல் 1850 கோடி டாலரில் ஷேர் மார்க்கெட்டையும் வைத்திருக்கிறது. தன்னுடைய நிறுவன தொழிலாளர்கள் கடத்தப்பட்டு மீட்கப்படாமல் போன சம்பவம் வெறியுலகிற்கு தெரியவந்தால் மாலி உட்பட 66 நாடுகளிலுள்ள தனது நிறுவனத்தின் பணிகளுக்காக தொழிலாளர்கள் வர அஞ்சுவார்கள். ஒட்டு மொத்த தொழிலும் பாதிக்கப்பட்டு விடும் என்று டிரான்ஸ்ரைல் அஞ்சுகிறது. அதனால அந்த வாய்பபைப் பயன்படுத்திக் கொண்டு நம் இந்தியா மாலியிலுள்ள தனது தூதரகம் மூலம் அந்த நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தால் பிணைத் தொகை சென்று விடும். தொழிலாளர்களும் விடுவிக்கப்படுவார்கள். இது தான் இறுதியான, உறுதியான முயற்சி. இல்லை என்றால் அல்கொய்தாவிடம் முடியாது. என்றவர்கள் கருணையில்லாத அல்கொய்தா குறிவைக்கிற மாலியிலுள்ள நம் 140 இந்தியத் தொழிலாளர்களின் மனப்பதற்றமும் அப்படித்தானிருக்கிறது.

தாமதிக்கிற ஒவ்வொரு மணித் துளியும் நெருக்கடிதான். என்றார்கள் மனவேதனையிலும் மிரட்சியிலும்.இந்தியாவிற்கு சவாலாகயிருக்கிற அல்கொய்தா இயக்கம் வெளி நாடுகளில் பணிபுரிகிற இந்தியத் தொழிலாளர்களைக் குறிவைக்கத் தொடங்கியிருப்பதுதை அத்தனை சாதாரணமாகக் கடந்த சென்று விடமுடியாது.

 கடத்தலில் காஷ்மீர் இயக்கம் தொடர்பா?.

மாலியில் தொழிலாளர்கள் கடத்தப்பட்ட அடுத்த அரைமணியில் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய பெண் ஒருவர், தான் ஜம்மு காஷ்மீரிலிருந்து பேசுவதாகவும், கடத்தப்பட்ட அவரின் உறவினர் பற்றிய விபரம் கேட்டவரிடம் பேசிய ஜெயக்குமார் அவரின் பெயரைக் கேட்க, தனது பெயர் ஷீலா. தன் கணவர் ரஞ்சத்சிங்கும் அது போன்று கடத்தப்பட்டவர்தான் என்று தெளிவாகப் பதில் சொன்னவரிடம் தன்னுடைய மொபைல் எண், கடத்தல் சம்பவம் பற்றிய விபரம் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டதில் கடைசிவரை பதில் சொல்லாதவர் எங்களின் மூவ் பற்றியே விசாரித்தவரிடம் பிடிகொடுக்கவில்லை. ஒருவேளை எங்களை ஆழம்பார்க்கிறாரா. இதில் காஷ்மீர் பயங்கரவாத இயக்கமும் இணைந்துள்ளதா என்ற சந்தேகமிருக்கு என்றார்.