'Tamil Nadu will fight against the assassination of democracy that dares to snatch it away' - Chief Minister's opinion Photograph: (dmk)
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி தமிழக தலைமைச் செயலகத்தில் ஆறு மணியளவில் அவசர கூட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக அலுவலர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.
வரும் நவம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மூலமாக இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்ட நாயக் தலைமையில் இந்த கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்ம் 'தமிழ்நாட்டிலும் SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என தெரிவித்துள்ளார்.
Follow Us