Advertisment

கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகள்; பயணிகள் அவதி!

Amni bus

மக்களின் பொது போக்குவரத்தில் ஆம்னி பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கின்றது. அரசு பேருந்துகளை விட கூடுதல் கட்டணமாக இருந்தாலும் கூட, சொகுசாக பயணிப்பதை பயணிகள் அதிகம் விரும்புவதால் தற்போது தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி கேரளா மாநிலம் வாளையார் சோதனை சாவடி எல்லையில் தமிழகத்தில் இருந்து சென்ற 30 ஆம்னி பேருந்துகள், கேரள மாநில போக்குவரத்து துறையினர் குறி வைத்து சிறைப்பிடித்தனர், பின்னர் ரூபாய் 70 லட்சம் வரை அபராதம் விதித்த விவகாரம் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏழு நாட்களாக தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து 1 கோடியே 15 லட்சம் அபராதம் விதித்துள்ள சம்பவம் மேலும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மத்தியில் கழகத்தை ஏற்படுத்தியது,இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகளின் நல சங்கங்கள் அறிவித்துள்ளது.

Advertisment

பாண்டிச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மதன் கூறுகையில்" தமிழகத்தில் உள்ளே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு கால் ஆண்டிற்கு அதாவது 90 நாட்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது, அதுவே ஒரு மாநிலத்தில் இருந்து வெளி மாநிலம் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு  அந்த மாநிலத்துக்குள் அனுமதிக்க சாலை வரி வசூல் செய்யப்பட்டு வந்தது, இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்தது, இதனால் சில நடைமுறை சிக்கல் இருந்ததால் மத்திய அரசு அனைத்து இந்திய சுற்றுலா அனுமதி எனப்படும் ஏ ஐ டி பி என்ற வரியை அமல்படுத்தியது. அதன்படி வெளி மாநிலம் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு 90 நாட்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் அல்லது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்தினால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் சாலை வரியை அந்த மாநிலத்திற்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும், இதற்கு ஆரம்பத்திலிருந்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து அதை ஏற்காமல் தமிழகத்தில் வரி வசூலிப்பதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறை மத்திய அரசு வசூல் செய்யும் வரியையும் பெற்றுக் கொண்டு தமிழக போக்குவரத்து துறையும் ஒரு வரியை வசூல் செய்வது நியாயமற்றது.

Advertisment

இது தொடர்பாக அனைத்து ஆம்னிகள் பேருந்துகள் நல சங்க தலைவர் அன்பழகனை தொடர்பு கொண்டோம்" மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்திந்திய சுற்றுலா அனுமதி என்ற வரி திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி தமிழகத்தில் உள்ளே வரும் ஆம்னி பேருந்துகளிடம் இருந்து அனைத்து இந்திய சுற்றுலா அனுமதி வரி மத்திய அரசு கடந்த மாதம் வரை பிரித்துக் கொடுத்துள்ளது, அதையும் பெற்றுக்கொண்டு , வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் உள்ளே வரும் எந்த ஒரு ஆம்னி பேருந்தாக இருந்தாலும் , காலாண்டு 90 நாட்களுக்கு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று இதுவரை வரி வசூல் செய்து வருகிறது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளிமாநிலங்கள் செல்ல குறிப்பா தமிழகத்தில் உள்ளே செல்ல 90 நாட்களுக்கு  மத்திய அரசு அமல்படுத்திய இந்தியா முழுவதும் பயணிக்க அனைத்து இந்திய சுற்றுலா வரி 90 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும், தமிழக அரசுக்கும் ஒரு லட்சத்து 50 ஆயரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.

இதனால் வெளி மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அந்த மாநில போக்குவரத்து கழகத்திடம் புகார் தெரிவித்து இருந்தனர், இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த போக்குவரத்து துறை தமிழக ஆம்னி பேருந்துகளை குறிவைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்து 100 மடங்கு அபராதம் விதித்து வருகின்றது. இதனை கண்டித்து தமிழகத்தில் இயங்கும் 4000 ஆம்னி பேருந்துகளில் 600 ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலம்  செல்கின்றது இதனால் வெளிமாநிலம் இயக்கப்படும் 600 ஆம்னி பேருந்துகளும் இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடும் போவதாக கூறினார் மேலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததால் தமிழக பாண்டிச்சேரி சேர்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அரியலூரில் அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Kerala omni bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe