சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் இன்று (25.09.2025) மாலை 4.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இணைந்து முறைப்படி தொடங்கி வைக்க உள்ளனர். 

Advertisment

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியைக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கருப்பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து நடத்தப்படுகிறது. இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியாகத் தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமான திட்டமான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து "நான் முதல்வன்", "விளையாட்டுச் சாதனையாளர்கள்", "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" மற்றும் "அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்" ஆகிய அரங்கங்கள் நடைபெற்று வருகிறது. 

Advertisment

இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள். இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள். கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து 2025 - 26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்கவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கீதா ஜீவன், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா. மதிவேந்தன் உள்ளிட்ட  அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.