தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (22-12-25) கொண்டாடப்பட்டது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் 40 கிலோ கேக்கை வெட்டி 11 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய விஜய், 'நான் ஒரு உறுதியை கொடுக்கிறேன். நாமும், நம்முடைய தமிழக வெற்றிக் கழகமும் சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எந்தவிதமான சமரசமும் இருக்காது. அதனால் நம்முடைய கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என்று பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அனைத்து புகழும் எல்லாவல்ல இறைவனுக்கே' எனப் பேசியிருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆற்காடு நவாப் முகமது அலி பேசுகையில், ''பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு ஒற்றுமைக்கு முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமாக பின்பற்றப்படுவது மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மனிதநேயம். அதேநேரம் மக்களுக்கான பாதுகாப்பு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு குழந்தைகளுக்கான பாதுகாப்பு. நாட்டின் இரண்டாவது பொருளாதார மேம்பாடு அடைந்த மாநிலம் தமிழ்நாடு '' என்றார்.
அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மட்டுமல்லாது தன்னுடைய அனைத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் நடிகர் விஜய் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறிவந்த நிலையில் தவெக சார்வில் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே தமிழ்நாடு பாதுகாப்பில் முதன்மை மாநிலமாக விளங்குவதாக ஆற்காடு நவாப் முகமது அலி பேசியிருப்பது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/a5873-2025-12-22-18-01-28.jpg)