தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, ஐ.நா.அவையின் சுற்றுச் சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதான "சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்" விருதினை பெற்றிருக்கிறார். இயற்கை பாதுகாப்பில் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக, சுப்ரியாசாகுவிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் ' எனும் இந்த விருது கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை வழங்கி வருகிறது. இது குறித்து ஐ.நா.அவையின் சுற்றுச் சூழல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிலையான குளிர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பில் முன்னோடியாகத் திகழும் சுப்ரியா சாகுவின்  முயற்சிகள் 25 லட்சம் பசுமை வேலைகளை உருவாக்கியுள்ளன ; வனப்பகுதியை விரிவுபடுத்தியுள்ளன.  உள்கட்டமைப்பில் வெப்ப பயன்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

12 மில்லியன் மக்களுக்கு பயனளித்து  காலநிலை மீள்தன்மைக்கு ஒரு மாதிரியை அமைத்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டதைய டுத்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட பலரும் சுப்ரியா சாகுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.