குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது போன்ற பிரச்சனைகளால் உடலில் இருந்து திரவங்கள் வெளியேறி நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இதனை எதிர்கொள்வதற்கு தண்ணீர், உப்பு, எலக்ட்ரோலைட்கள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவையாக ஓ.அர்.எஸ் (ORS) கரைசல் என்ற திரவ பொருள் கொடுக்கப்படுகிறது. அந்த கரைசல், உடல் இழந்த திரவங்கள் மற்றும் மினரல்களை உடனடியாக மீட்டு எடுத்து உடலில் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. 

Advertisment

இப்படிப்பட்ட ஓ.ஆர்.எஸ் கரைசல் பல்வேறு வகையாக உருவெடுத்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பல மருந்தகம் மற்றும் மருந்து கடைகளில் ஓ.ஆர்.எஸ்.எல், ஓ.ஆர்.எஸ்.எல். பிளஸ், ஓ.ஆர்.எஸ் பிட் என லேபிள்கள் ஒட்டப்பட்டு பல்வேறு கலர்கள் மற்றும் நிறங்கள் புகைப்படங்களோடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக சுகாதாரத்துறை நிர்ணயித்த அளவை விட ஓ.ஆர்.எஸ் கரைசலில் சோடியம் மற்றும் குளுக்கோஸ் அதிகமாக வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இன்னும் பாதிப்பு தீவிரம் அடையும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இரண்டு நாட்களுக்கு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தில் இருக்கக்கூடிய மருந்தகம் மற்றும் கடைகளில் ஓ.ஆர்.எஸ்.எல் என லேபிளை பயன்படுத்தி விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உலக சுகாதார மையம் (WHO) மற்றும் ஐ.சி.எம்.ஆர் என இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் அச்சிடப்பட்ட ஓ.ஆர்.எஸ்.எல் கரைசல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருந்தகங்கள் மற்றும் தனியார் கடைகளில் ஓ.ஆர்.எஸ்.எல், ஓ.ஆர்.எஸ்.எல். பிளஸ் என பெயர் அச்சிடப்பட்டு லேபிளை பயன்படுத்தி விற்பனை செய்ய தமிழக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. மேலும், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் உடனடியாக அந்த ஓஆர் எஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

Advertisment