தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

ஏற்கெனவே மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த் போஸ், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அம்மாநிலத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 8 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.