தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் நில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இவற்றில் 9 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் முக்கியமாக, 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த மசோதா ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதனை தொடர்ந்து, அந்த மசோதா அப்படியே மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த மசோதாவுக்கு அவர் தற்போது ஒப்புதல் கொடுத்துள்ளார். 

அதே போல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிப்பது, நிதி சார்ந்த மசோதா என மொத்தம் 9 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 

Advertisment