தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில், டேவின் தேவாசீர்வாதம் உட்ப 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழக அரசினுடைய லஞ்ச ஒழுப்புத்துறையின் இயக்குநராக இருந்த அபய குமார் சிங் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அந்த பதவி காலியாக இருந்த நிலையில் அந்த பதவிக்கு, ஆயுதப்படை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற டேவின் தேவாசீர்வாதத்துக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகித்து வரும் நகராட்சி துறையில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டிருந்ததன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட் தேவாசீர்வாதத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

அதே போல், சஸ்பெண்ட் ஆகி காத்திருப்பு பட்டியலில் இருந்த ஜெயராம் ஐபிஎஸ்ஸை, ஏடிஜிபி சிவில் டிஃபென்ஸ் அடிஷனல் கமாண்டண்ட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் பவானீஸ்வரிக்கு ஹெட் குவார்ட்டர்ஸ் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் மணிவண்ணனை டிஐஜி ராமநாதபுரம் ரேஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது போன்று 20 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisment