Advertisment

ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

tamilnadugovernment

Tamil Nadu government orders 9 IAS officers transferred

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ததோடு, 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாகம் ஆணையர் பழனிசாமி கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாகம் ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராகவும், அறிவியல் நகரம் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மை செயலாளராகவும், வரலாற்று ஆராய்ச்சி, ஆவணக் காப்பக ஆணையர் ஹர் சஹாய் மீனா, அறிவியல் நகர துணைத் தலைவராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் மலர்விழி, வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக்காப்பக ஆணையராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறைத் தலைவர், இயக்குநராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணைச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல் தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, பதவி உயர்வு பெற்று ஆவடி போலீஸ் கமிஷனராகவும், மும்பை, சிபிஐயில் ஐஜியாக உள்ள தீபக் எம்.தோமர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று, டிஜிபி அலுவலக தலைமையிட கூடுதல் டிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த அனிசா உசைன், பதவி உயர்வு பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா பதவி உயர்வு பெற்று, கமாண்டோ படை ஏடிஜிபியாகவும், தலைமையிட ஐஜியாக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, போலீஸ் நலன் ஏடிஜிபியாகவும், ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை ஏடிஜிபியாகவும், போதைப்பொருள் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாக இருந்த அமல்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனராகவும், சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும்,

தாம்பரம் போலீஸ் கமிஷனராக இருந்த அபின்தினேஷ் முடக், போதைப்பொருள் மற்றும் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாகவும், கமாண்டோ படை ஏடிஜிபியாக இருந்த தினகரன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் டிஐஜியாக உள்ள ரம்யா பாரதி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் ஐஜியாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி அதே பிரிவில் ஐஜியாகவும், வட சென்னை மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் சோனல் சந்திரா, குற்ற ஆவணக்காப்பக ஐஜியாகவும், ஒன்றிய அரசில் உளவுத்துறை டிஐஜியாக உள்ள ஜார்ஜி ஜார்ஜ், அதே பிரிவில் ஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

ias officers transfer TamilNadu government
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe