Tamil Nadu Government Film Awards Announcement Photograph: (AWARD)
தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டிற்கான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி நடிகர் விஜய் சேதுபதி, கார்த்திக், தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
சிறந்த நடிகைகளுக்கான பட்டியலில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், சாய் பல்லவி, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரம், ஜெய்பீம், பரியேறும் பெருமாள், அசுரன், அறம், கூழாங்கல், கார்கி ஆகியவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்புப் பரிசாக 1.25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார்.
Advertisment
Follow Us